தேவை
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்,
புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்,
புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். இல்லையெனில் கருத்து விடும்.பச்சடி செய்யும்போது பிழிந்து போடவும்.
கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கெட்டியான தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக