அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான இனிப்பு. அதன் செய்முறை எழுதியுள்ளேன்.
தேவை
பயத்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
நெய் - 2 கப்
பால் - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -15
முந்திரி -15
திராட்சை - 10
சீவிய பாதாம் - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - சில இதழ்கள்.
கேசரி பவுடர் - 4 சிட்டிகை
செய்முறை
பயத்தம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் ஒரு கப் தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.
2 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை வறுத்து எடுக்கவும்.அதில் மேலும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து சுடவைத்து,கோதுமை மாவை பொரித்தாற்போல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
ஒரு
வாணலியில் வெந்த பயத்தம்பருப்பு போட்டு நன்கு மைய மசிக்கவும். பருப்பு அரை
வேக்காட்டில் இருக்கக் கூடாது. அதனுடன் பொரித்த கோதுமை மாவு சேர்த்து
நன்கு கிளறவும்.
இரண்டும் சேர்ந்து கொண்டு கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும்.கேசை சிறிதாக்கி கை விடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டும் சமயம் சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளறவும். கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்க்கவும்.
கரண்டியில் ஒட்டாமல் நெய் பிரிந்து நன்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.
விருப்பப் பட்டால் திராட்சை, பாதாம் துண்டுகள் நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
சுவையான திருவையாறு ஒரிஜினல் அசோகா ஹல்வா வாயில் போட்டால் கரையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக