Wednesday 25 May 2016

சாமை பிரியாணி

தேவை
சாமை அரிசி - 2 கப் 
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி - தலா 1/4 கப்  (நறுக்கியது)
தயிர் - அரை கோப்பை
இஞ்சி, பூண்டு விழுது, புதினா - தேவையான அளவு
சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன் 
தனியாபொடி - 3/4 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 11/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்   
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நெய்,எண்ணெய் சேர்த்து - 1/4 கப் 
ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை 
சாமியைக் களைந்து ஒரு டீஸ்பூன் நெய்யில் சற்று வதக்கவும்.
குக்கரில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். 
இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் பொடி, தனியாபொடி, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். 
பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும்.  
நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். 
நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து சற்று வதக்கவும்.
தேவையான  உப்புடன் தயிர் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், சாமையை சேர்க்கவும்.
ஆவி வந்ததும் வெயிட் போட்டு, குக்கரை சிம்மில் வைத்து, 10 நிமிடத்தில் அணைத்து விடவும்.
ஆறியதும் திறந்து நன்கு கலக்கவும். கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிப் போடவும்.
நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
ருசியான சாமை பிரியாணி ரெடி.
இதே போன்று வரகு, குதிரைவாலி, தினை அரிசிகளிலும் பிரியாணி செய்யலாம். இவை உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள். அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment