திங்கள், 16 மே, 2016

பருப்பு ரசம்


தேவை:

துவரம் பருப்பு - ¼ கப்
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறு துண்டு
தாளிக்க – நெய், கடுகு
கொத்துமல்லி

செய்முறை

துவ்ரம் பருப்புடன் சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக விடவும். புளியில் 2 கப் நீர் விட்டுக் கரைத்து அதில் உப்பு, பெருங்காயம், ரசப்பொடி, தக்காளி நறுக்கிப் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து புளி வாசனை போய் 1½ கப் ஆனதும், வேகவைத்த பருப்பை இரண்டரை கப் நீர் விட்டு நன்கு கரைத்துக் கொட்டவும். மேலே நுரை வந்ததும் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து மல்லி சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக