தேவை
மேல் மாவுக்கு
அரிசி மாவு --- 1 கப்
நல்லெண்ணை --- 2 தேக்கரண்டி
பால் -- 2 தேக்கரண்டி
உப்பு -- 1 சிட்டிகை
மேல் மாவுக்கு
அரிசி மாவு --- 1 கப்
நல்லெண்ணை --- 2 தேக்கரண்டி
பால் -- 2 தேக்கரண்டி
உப்பு -- 1 சிட்டிகை
பூரணத்திற்கு
தேங்காய்த்துருவல் --- 1 கப்
பொடித்த வெல்லம் -- 1/4 கப்
ஏலப்பொடி -- 1/2 தேக்கரண்டி
செய்முறை
அரிசிமாவை நன்கு சலித்துக் கொள்ளவும்.
நல்ல நைஸாக இருக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1/4 கப் நீர் சேர்த்து
நன்கு கொதிக்க வைக்கவும். அதில் எண்ணை, உப்பு, பால் சேர்த்து
கொதித்ததும், அதில் கரைத்த அரிசிமாவை விட்டுக் கிளறவும்.
மாவு கெட்டியாகி, கட்டி இல்லாமல் ஒட்டாமல் வரும்போது இறக்கி ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதில் இருக்கும் சூட்டுக்கு உள்ளே நன்கு வெந்து கொள்ளும். ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
தேங்காய்த் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்து வாணலியில் போட்டு கிளறவும். இரண்டும் சேர்ந்து பூரண பதம் வந்ததும் அதில் ஏலப்பொடி சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.
மேல்மாவு அதிகமாகிவிட்டதா? கவலையே வேண்டாம்! அடுத்த ரெசிபி 'மண்ணாங்கட்டி'!
குறிப்பு
கொழுக்கட்டை மாவு கிளறுவது ஒரு சிரமமான விஷயம். புதிதாக சமைப்பவர்களுக்கு சரியாக வராது. வென்னீரைக் கொதிக்க வைத்து அதில் மாவை அப்படியே போடும் போது கட்டி தட்டி விடும். சரியாக கப் செய்ய வராது. நான் எழுதியுள்ள முறை மிக சுலபமானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக