சனி, 21 மே, 2016

ஜீரண லேகியம்

தேவை
ஓமம்  25 கிராம்
மிளகு  10 கிராம்
சுக்கு  ஒரு சிறிய துண்டு
அரிசி திப்பிலி  10
கண்டதிப்பிலி  10 கிராம்
சித்தரத்தை, விரலி மஞ்சள்  தலா ஒரு சிறிய துண்டு
வெல்லம்  150 கிராம்
நெய்  100 மில்லி.
செய்முறை: ஓமம், மிளகு, சுக்கு, கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகாக்கவும்.
செய்துவைத்த பொடியை சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறிய உடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: வயிறு சரியில்லாத சமயத்தில் இந்த லேகியத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக உருட்டி  சாப்பிடலாம். வயிற்று உப்புசம், அஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக