திங்கள், 30 மே, 2016

மணத்தக்காளிவற்றல் பொடி

உப்பு போடாமல் காய வைத்த மணத்தக்காளி வற்றல் 1 கப் அளவிற்கு தேவை
மிளகாய் வற்றல் – 10
உளுத்தம் பருப்பு – 6 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு  தேவையான அளவு 
நல்லெண்ணெய்  4 டீஸ்பூன் 
 
செய்முறை 
நல்லெண்ணெயில் மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை வறுக்கவும்.

உப்புன் வறுத்த மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை முதலில் அரைத்துக் கொண்டு, பின்பு உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். 

ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சாதத்தில் ஊற்றி இப்பொடியுடன் பிசந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள், பேதி இவை உடன் சரியாகும். 

மணத்தக்காளி இலையைக் காய வைத்தும், மேற்கூறியபடி பொடி செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப் புண் இவை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக