திங்கள், 30 மே, 2016

ரவா லட்டு

தேவை
ரவை  -  1 கப்
சர்க்கரை  -  1 1/4 கப்
நெய்  -  1/2 கப்
ஏலப்பொடி  -  1 டீஸ்பூன்
முந்திரி  -  15
திராட்சை  - 10

செய்முறை
5 டீஸ்பூன் நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
சர்க்கரையையும்  மிக்சியில் பொடி செய்து சலிக்கவும். ரவை மாவுடன் சர்க்கரைபொடி, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து அத்துடன் சேர்த்து, நெய்யை நன்கு சுடவைத்து மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

விருப்பமானால் அரை கப் தேங்காயை நெய்யில் வறுத்து சேர்த்து லட்டு பிடிக்கலாம்.
வித்யாசமான சுவையுடன் இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக