சனி, 21 மே, 2016

இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

தேவை
இளம் இஞ்சி  25 கிராம்
பிஞ்சு பச்சை மிளகாய்  10
புளி  ஒரு சிறிய  நெல்லிக்காய் அளவு
வெல்லம்  பெரிய நெல்லிக்காய் அளவு 
நல்லெண்ணெய்  6-8 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு.
செய்முறை
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி… புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். 
மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக