வெள்ளி, 6 மே, 2016

எலுமிச்சம்பழ ரசம்

தேவை:

எலுமிச்சம்பழம்-- 1½
துவரம் பருப்பு-- 4 தேக்கரண்டி

ரசப்பொடி-- ¼ தேக்கரண்டி
மிளகுப்பொடி-- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-- 2
இஞ்சி-- சிறு துண்டு
பெருங்காயப்பொடி-- சிறிது
உப்பு-- தேவையான அளவு
தக்காளி-- 1
நெய்-- 2 தேக்கரண்டி
கடுகு-- 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். 
அதில் பெருங்காயப்பொடி, உப்பு, ரசப்பொடி சேர்க்கவும். இஞ்சியை நசுக்கிப் போடவும். ஒரு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். தக்காளியை நறுக்கிப் போடவும்.
ரசம் கொதித்து ஒரு கப் அளவு வந்ததும், அதில் வெந்த துவரம்பருப்பை மசித்து, ஒரு கப் நீருடன் சேர்த்து விடவும்.
மேலே நுரைத்து வந்ததும் இறக்கவும்.
நெய்யைக் காயவைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுப்பொடி சேர்த்து ரசத்தில் கொட்டவும்.எலுமிச்சையை சாறு பிழிந்து கொட்டையில்லாமல் சேர்க்கவும். கொத்தமல்லி தழையைக் கிள்ளிப் போடவும்.
மணமான, ருசியான சூடான ரசத்தை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.... அப்படியே குடித்தாலும் அருமையாக இருக்கும்.

1 கருத்து: