திங்கள், 2 மே, 2016

அவல் பாயசம்

அவல்-- 1/2 கப்
ஜவ்வரிசி-- 5 தேக்கரண்டி
சர்க்கரை-- 1கப்
பால்-- 1 கப்
ஏலக்காய்-- 6
மிந்திரி-- 10
திராட்சை-- 10
நெய்-- 2 தேக்கரண்டி
ஒரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி அதில் மிந்திரி, திராட்சையை சிவக்க வறுக்கவும். அதை எடுத்து விட்டு அதிலேயே அவலைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
தண்ணீரும், 2 கரண்டி பாலும் சேர்த்து கொதிக்க விடவும். அதில் வறுத்த அவல், ஜவ்வரிசி சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை சேர்க்கவும். கரைந்ததும் இறக்கி அதில் மீதி பாலை விட்டு, ஏலக்காயை பொடி செய்து போட்டு, வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து சூடாகவோ, குளிர வைத்தோ அருந்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக