சனி, 7 மே, 2016

கத்தரிக்காய் துவையல்.

தேவை
பெரிய கத்தரிக்காய் -- 1
உளுத்தம்பருப்பு -- 2 தேக்கரண்டி
மிளகு -- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் -- 3
புளி -- நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் -- சிறு துண்டு
எண்ணை -- 3 தேக்கரண்டி
உப்பு -- தேவையான அளவு

செய்முறை
முழு கத்தரிக்காயில் சிறிது எண்ணை தடவி அடுப்பில் வைத்து தோலி கருகும்வரை சுடவும்.

எண்ணையில் பெருங்காயம், உளுந்து, மிளகு, மிளகாய் வற்றலை வறுக்கவும். 

கத்தரிக்காயை தோலியை உரித்துக் கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த சாமான்களுடன், புளி, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். 

கடைசியில் சுட்ட கத்தரி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சாதத்துடன் பிசைந்தும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் ஏற்றது இந்த துவையல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக