செவ்வாய், 17 மே, 2016

ஸ்ரீரங்கம் தோசை ...சம்பார தோசை


ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் ஸ்பெஷல் தோசை இது. 

தேவை 
பச்சை அரிசி   1 கப் 
இட்லி அரிசி   1 கப் 
உளுத்தம்பருப்பு   1 கப் 
வெந்தயம்   1 டீஸ்பூன் 
சுக்குப்பொடி  1/2 டீஸ்பூன் 
மிளகு சீரகப்பொடி  1டீஸ்பூன் 
நெய்  தோசை வார்க்க 
உப்பு  தேவையான அளவு 
செய்முறை 
அரிசி, உளுத்தம் பருப்பைக் களைந்து வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும்.
தேவையான உப்பு சேர்க்கவும். சுக்குப்பொடியை சேர்க்கவும்.
2 டீஸ்பூன் நெய்யில் மிளகுசீரகப் பொடியை பொறித்து மாவில் கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, நெய்யை விட்டு சற்று தடிமனான தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வார்க்கவும்.
சூடான, சுவையான சம்பார தோசையுடன், சட்னி, சாம்பார் சேர்த்து பரிமாறவும்.
நெய் பிடிக்காதவர்கள், நல்லெண்ணெய் விட்டு வார்க்கலாம்.

 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக