திங்கள், 23 மே, 2016

தனியா ரசம்


தேவை

புளி – 1 சிறு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
உப்பு, பெருங்காயம், நெய், கடுகு, தக்காளி
தனியா – 2 டீஸ்பூன்
கொத்துமல்லி
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்

செய்முறை

இதற்கு துவரம் பருப்பை வேகவிடக்கூடாது. துவரம் பருப்பு, தனியாவை தண்ணீரில் சற்று ஊறவைத்து அரைக்கவும். புளியை 2 கப் நீரில் கரைத்து உப்பு, பெருங்காயம், தக்காளி, ரசப்பொடி போட்டுக் கொதிக்க விட்டு, நன்கு கொதித்து வாசனை போனபின் துவரம் பருப்பு, தனியா அரைத்த விழுதுடன் தேவையான நீர் சேர்த்து விளாவி நுரைத்து வந்ததும், நெய்யில் கடுகு தாளித்து மல்லி,கறிவேப்பிலை  கிள்ளிப் போடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக