தேவை
அரிசி மாவு – 1 கப்
பொட்டுக்கடலை மாவு -- 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 20
சீரகம் -- 1 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு – 1 கப்
பொட்டுக்கடலை மாவு -- 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 20
சீரகம் -- 1 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய்
மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும். வேண்டுமானால் அதில் சிறிது
தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், முறுக்கு
உழக்கில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து
நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும். பின் அதனை பொன்னிறமாக பொரித்து
எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால்,
முந்திரி முறுக்கு ரெடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக