தேவை
ரவா – 1 கப்
மைதா - ¼ கப்
துருவிய தேங்காய் - ½ கப்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 8
எள் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி – சிறிது
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
இதற்கு நைஸான பாம்பே ரவாதான் ஏற்றது.
மைதாவை ஆவியில்
வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாயை நைஸாக
அரைக்கவும்.
ரவா, மைதா, அரைத்த விழுது, பெருங்காயம் , வெண்ணெய், உப்பு,
சேர்த்து தேவையான நீர் சேர்த்துப் பிசையவும்.
சிறிய சீடையளவு உருட்டி, விரலால் நடுவில் அமுக்கி,
தட்டையாக்கிப் பிளாஸ்டிக் பேப்பரில் போடவும்.
பின்பு எண்ணெயில் வேகவிட்டுப்
பொன்னிறமாக எடுக்கவும்.
காரப்பொடி போட்டுச் செய்வது போலில்லாமல், இது
வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக