வெள்ளி, 27 மே, 2016

பயத்தம் பருப்பு வடை

தேவை
பயத்தம்பருப்பு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வற்றல்  – 5
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பயத்தம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை நன்கு களைந்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய் வற்றல், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பயத்தம்பருப்பு வடை ரெடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக