தேவை
பாதாம் – 15
பால் - 21/2 கப்
அரிசி – 4 டேபிள் ஸ்பூன்
சீனி - 1/4 கப்
குங்குமப்பூ – 8 இதழ்கள்
ஏலப்பொடி, பிஸ்தா துண்டுகள் – 4
டீஸ்பூன்.
செய்முறை
அரிசியைக் களைந்து நீரில் சற்று
ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு 1/2 மணி
ஊற விட்டு தோல் நீக்கி பாலுடன் சேர்த்து
மேலும் 2 சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். விழுது நல்ல நைஸாக இருக்க வேண்டும்.
இரண்டு டீஸ்பூன் வெதுவெதுப்பான
பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். மீதி பாலை அடுப்பில் வைத்து பால் 3/4 பாகம் ஆகும்
வரைக் காய்ச்சவும். அதில் சர்க்கரை போட்டுக் கரைந்ததும், அதில் அரைத்த பாதாம்,
அரிசி விழுதைப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கிளறாவிட்டால், அடி பிடித்து விடும்.
பாதாம், அரிசி வெந்து கெட்டியான பதம் வந்ததும், இறக்கி குங்குமப்பூ, ஏலப்பொடி
சேர்க்கவும். சிறிய கப்புகளில் ஊற்றி, மேலே சீவிய பிஸ்தா துண்டுகள் சேர்த்து குளிர
வைத்து பரிமாறாவும். இது ரிச்சான காஷ்மீர்வாசிகளால் செய்யப்படும் ரிச்சான பாயசம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக