வெள்ளி, 20 மே, 2016

வல்லாரைத் துவையல்

தேவை
வல்லாரைக்கீரை  ஒரு கட்டு
கறிவேப்பிலை  6.7 கொத்துகள்
தேங்காய்த் துருவல்  4 டீஸ்பூன
உளுத்தம்பருப்பு  4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு  3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  2
மிளகு  2 டீஸ்பூன்
புளி  சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய்  2 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு.
செய்முறை
வல்லாரைக் கீரை, கறிவேப்பிலையை ஆய்ந்து, நன்கு அலம்பி எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள எண்ணெயில் வல்லாரைக் கீரை மற்றும் கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும்.
இவை ஆறியவுடன் தேங்காய்த் துருவல், புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு: வல்லாரைக்கீரை, ஞாபகசக்திக்கு  மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக