Monday 2 May 2016

கோஸ் சூப்

தேவை
கோஸ்  -  சிறியது...1
 உருளைக்கிழங்கு ... 5
பெரிய வெங்காயம்...1
கேரட்...1
தக்காளி...1
ப்ரெட் துண்டுகள்

செய்முறை
2லி. தண்ணீரில் சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கோஸ் போட்டு கொதிக்க விடவும்.
கேரட், தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்கவும்.
உப்பு,  பிரிஞ்சி இலை, வெண்ணெய் சேர்க்கவும்.
அரை மணி நேரம் நன்கு கொதிக்க விட்டு,காய்கறிகள் நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும்.
சூப்பை கிண்ணங்களில் விட்டு, உப்புபொடி, மிளகுப்பொடி, பொரித்த ப்ரெட் துண்டங்கள், வெண்ணெய் அல்லது க்ரீம் சேர்த்து அருந்தவும்.
இது ரஷ்யர்களின் பிரபலமான சூப்.

No comments:

Post a Comment