திங்கள், 23 மே, 2016

மோர் ரசம்

காய்ச்சல் போன்ற சமயங்களில் தயிர், மோர் ஊற்றிக் கொள்ள முடியாத நேரங்களுக்கு ஏற்ற ரசம் இது.

2 கப் புளித்த மோரை நீர்க்கக் கரைத்துக் கொண்டு அதில் தேவையான உப்பு, 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கட்டியின்றி கரைக்கவும். எண்ணெயில் அல்லது நெய்யில் 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் ஓமம், 2 அல்லது 3 பச்சை மிளகாய் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துத் தாளித்து மோரில் கலந்து, சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்து மல்லியைக் கிள்ளிப்போட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக