தேவை
நறுக்கிய இஞ்சி துண்டுகள் --- 1/2 கப்
மிளகாய் வற்றல் ---4
மஞ்சள் தூள் --- 1/4 டீஸ்பூன்
புளி --- பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் --- பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணை --- 8 டேபிள் ஸ்பூன்
கடுகு --- 1/2 டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு கருகாமல் வறுத்தெடுத்து அதே எண்ணையில் இஞ்சி துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
வறுத்தெடுத்த மிளகாய், இஞ்சி நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்து கடைசியாக வெல்லத்தையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுது, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கி இறக்கவும்.
சூப்பரான சுவையில் காரசாரமான இஞ்சி தொக்கு தயிர் சாதத்துக்கு அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக