தேவை
முட்டைகோஸ் கால் கிலோ
வாழைத்தண்டு (பெரிதாக) 1
மிளகு 10
மிளகாய் வற்றல் 2
புளிக்காத தயிர் ½ கப்
கடுகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
தேங்காய்த் துருவல் 4 டேபிள்டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
முட்டைகோஸ் கால் கிலோ
வாழைத்தண்டு (பெரிதாக) 1
மிளகு 10
மிளகாய் வற்றல் 2
புளிக்காத தயிர் ½ கப்
கடுகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
தேங்காய்த் துருவல் 4 டேபிள்டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாழைத்தண்டின்
மேல்பட்டைகளை உரித்து, தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி, நார் எடுத்து,
பொடியாக நறுக்கவும்.
இதை கோஸுடன் சேர்த்து, உப்பு போட்டு வேகவிடவும்.
மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு
எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வேகவைத்த கோஸ்
வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.
இதனை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி,
தயிர் விட்டு கலக்கவும்.
மீதமுள்ள தேங்காய் எண்ணெயில் கடுகு,
உளுத்தம்பருப்பை தாளித்து சேர்க்கவும்.
கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி
சேர்க்கவும்.
வாழைத்தண்டு பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும்.
நார்ச்சத்து உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சூடான
சாதத்தில் இந்த மோர்க்கூட்டு சேர்த்து, பொரித்த அப்பளம் தொட்டு
சாப்பிட்டால்.. அருமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக