திங்கள், 16 மே, 2016

சீரக ரசம்


இதற்கு தக்காளி, பெருங்காயம் சேர்க்கக் கூடாது. துவரம் பருப்பை வேகவிடத் தேவையில்லை.

தேவை:

துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
சீரகம் – டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
மிளகாய் வற்றல் – 1
புளி – எலுமிச்சை அளவு
உப்பு, நெய், கடுகு, ரசப்பொடி ½ டீஸ்பூன்

செய்முறை

புளியைக் கரைக்காமல் கொட்டை, நார் நீக்கி பிய்த்துப் போட்டு, 2 கப் நீர் விட்டு அதில் உப்பு, ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். புளி வாசனை போய் 1½ கப் ஆனபின், அரைத்துள்ள கரைசலில் 2½ கப் நீர் சேர்த்து ரசத்தில் விடவும். நுரைத்து வந்தபின் நெய்யில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் கொத்துமல்லி சேர்ப்பதில்லை.

இதையே ரசப்பொடி போடாமல் 2 அல்லது 3 மிளகாய் வற்றல் கூட வைத்து அரைத்துச் செய்யலாம்.

ஊற வைத்த சாமான்களுடன் 4 மிளகு, 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்துவிட்டு மேலே கூறியபடி செய்து அரைத்த விழுதுடன் பருப்பு ஜலம் சேர்த்து விளாவினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக