திங்கள், 30 மே, 2016

கொத்துமல்லி பொடி

ஒரு கப் அளவு பச்சை கொத்துமல்லி தழையை வேர் நீக்கி சுத்தம் செய்து, அலம்பி வெயிலில் நன்கு காய வைக்கவும். 

ஒரு கப் அளவு கொத்துமல்லிக்கு எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்கள்: மிளகாய் வற்றல் – 15
உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 6 ஸ்பூன் 
புளி – கொட்டைப் பாக்களவு
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையான அளவு
மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, புளியைப் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

நைஸானதும் கொத்துமல்லித் தழையைப் போட்டு அரைக்கவும். கடைசியாக பருப்புகளைப் போட்டு அரைக்கவும். 

பருப்புகளை சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். இந்த கொத்துமல்லி பொடி சற்று ஈரப்பசையோடு இருக்கும். பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம். 

பிசைந்து சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் மிக நன்றாக இருக்கும்.

2 கருத்துகள்: