திங்கள், 16 மே, 2016

கண்டந்திப்பிலி ரசம்

தேவை

துவரம் பருப்பு - கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம்
தனியா - 2 டீஸ்பூன்
மிளகு – 12
மிளகாய் வற்றல் – 3
கண்டந்திப்பிலி – 6 குச்சிகள்
சீரகம் 1 – டீஸ்பூன்
நெய், கடுகு, கறிவேப்பிலை
சிறிய தக்காளி – 1

செய்முறை

தனியா, மிளகு, மிளகாய் வற்றல், கண்டந்திப்பிலையை சிறிது எண்ணெயில் சிவக்க வறுக்கவும். இத்துடன் ஊற வைத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

புளியைக் கரைத்துவிட்டு உப்பு, பெருங்காயம், தக்காளி, அரைத்த விழுது போன்றவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, புளிவாசனை போக கொதித்துக் குறைந்தபின் பருப்பை நீருடன் சேர்த்து விளாவி, நுரைத்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தனியா, மிளகு, மிளகாய் வற்றல், கண்டந்திப்பிலியுடன் ஐந்து பல் பூண்டைப் போட்டு வதக்கி அரைத்து, மேலே சொன்னபடி ரசம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக