தேவை
துவரம் பருப்பு - ¼ கப்
கொள்ளு, பயத்தம் பருப்பு இரண்டுமாக - ¼ கப்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம் – சிறு துண்டு
கடலைப் பருப்பு - 1½ டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு - ¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
பூண்டு – 3 பல்
தக்காளி – 1
நெய், கடுகு, கருவேப்பிலை, கொத்துமல்லி தழை முதலியன
செய்முறை
துவரம் பருப்பு, கொள்ளு, பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேகவிட்டு மசிக்கவும். புளியை 2 கப் நீரில் கரைத்து, அதில் உப்பு, தக்காளி, கருவேப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும். 2 டீஸ்பூன் எண்ணெயில் கடலைப் பருப்பு, பெருங்காயம், தனியா, மிளகு, மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து, கடைசியில் பூண்டை வதக்கி எல்லாம் சேர்த்து அரைத்து ரசத்தில் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துக் குறைந்ததும், வெந்த பருப்புகளை நன்கு கரைத்து வேண்டிய நீர் சேர்த்து விட்டு நுரைத்து வந்தபின் இறக்கி நெய்யில் கடுகு தாளித்து கொத்துமல்லி கிள்ளிப் போடவும். இதில் முந்திரிப் பருப்பை வறுத்துச் சேர்த்தால்’ரிச்’சாக இருக்கும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக