எப்போதும் ஒரே விதமான இட்லி,
சட்னி, சாம்பாரைச் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு இந்த வித்யாசமான இட்லி
சுவையாக இருக்கும்.
தேவையான அளவு காலிப்ளவர், கோஸ்,
பெரிய வெங்காயம் இவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கவும். பட்டாணியை உரித்துக்
கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இரண்டு ஸ்பூன் மிளகு,
சீரகத்தை சுமாராகப் பொடி செய்யவும். தேங்காயைப் பல் பல்லாக மெல்லிதாக நறூக்கவும்.
முந்திரிப் பருப்பை (தேவையானால்) துண்டுகளாக்கவும். கொத்துமல்லியைப் பொடிப்பொடியாக
ஆய்ந்து நறுக்கவும்.
காய்கறிகள் பட்டாணி, வெங்காயம்
இவற்றை சிறிது டால்டாவில் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இஞ்சி, மிளகாயையும்
வதக்கவும். சிறிது நெய்யில் மிளகு சீரகப் பொடியைப் பொரித்துக் கொண்டு முந்திரிப்
பருப்பை சிவக்க வறுக்கவும். முதல் நாள் அரைத்து வைத்துள்ள இட்லி மாவில்,
காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், முந்திரித் துண்டுகள், மிளகு,
சீரகப்பொடி, கொத்துமல்லி இவற்றைப் போட்டு நன்கு கலந்து எப்பொழுதும் போல் இட்லி
வார்க்கவும். சத்து நிறந்த சுவையான இட்லி ரெடி.
‘இட்லியா? போர், வேண்டாம்’ என்று ஓடும் குழந்தைகளையும் சாப்பிட்த் தூண்டும். காய்கறிகளின் அளவு அவரவர் தேவைக்கேற்றபடி சேர்த்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக