தேவை
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 3
பூண்டு - 8 பல்
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கண்டி
தாளிக்க:
நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மேலே அலங்கரிக்க:
கொத்தமல்லி, கறிவேப்பிலை
புளி - சிறு எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - கால் கப்
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 3
பூண்டு - 8 பல்
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கண்டி
தாளிக்க:
நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மேலே அலங்கரிக்க:
கொத்தமல்லி, கறிவேப்பிலை
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாக சிவக்க வறுத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். புளிக்கரைசலை கேஸில் வைத்து அத்துடன் தேவையான உப்பு, பெருங்காயப்பொடி, நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
ஒன்றரைக் கப்பாக குறைந்து புளி வாசனை போனதும், அரைத்த விழுதை அதில் சேர்க்கவும்.மேலும் பத்து நிமிடங்கள் கொதித்ததும் வெந்த துவரம்பருப்பை 2 கப் தண்ணீரில் கரைத்து விட்டு, ரசம் பொங்கி வந்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு தாளித்து மேலே கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்.
விருப்பப்பட்டால் சில முழுப் பூண்டுகளை நெய்யில் வதக்கி ரசம் கொதிக்கும்
போது சேர்த்தால் அருமையாக இருக்கும். ரசத்தை எப்போதும் கொதிக்க விடக்
கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக