Sunday 15 May 2016

காரட் பாதாம் பாயசம்


தேவை
பாதாம்--- 40
முந்திரி--- 25
காரட்--- பெரிதாக 1
சர்க்கரை--- 1 கப்
பால்-- 1 லிட்டர்
குங்குமப்பூ--- 10 இதழ்கள்
ஏலக்காய்--- 8

மேலே அலங்கரிக்க

பாதாம், முந்திரி, திராட்சை


செய்முறை

பாதாம், முந்திரியை வென்னீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.



காரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.



பாலை 3/4 லிட்டர் ஆகும்வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.



பாலும், விழுதும் சேர்ந்துகொண்டதும் இறக்கவும்.

மேலே குங்குமப்பூ இதழ்களை சேர்க்கவும்.ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.



குளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெலிதாகச் சீவிய பாதாம், மிந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும். ரிச்சான இந்த பாயசம் பார்ட்டிகளுக்கு ஏற்றது.

No comments:

Post a Comment