Sunday 8 May 2016

அவியல்

தேவை

தயிர் - ஒரு கப் தேங்காய் துருவல் - ¾ கப்
காய்கறிக்கலவை - 2½ கப்
(பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய்,அவரைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, புடலங்காய்,பட்டாணி)
பச்சை மிளகாய் - 3 (அ) 4 
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து 

பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை ஒரே அளவான சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயையும், பச்சை மிளகாயும் சிறிது தயிர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
காய்கறிகளை தேவையான தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு வடிகட்டவும்.வெந்த காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கேஸில் வைத்துக் கொதிக்க விடவும்.

 

கீழே இறக்கி அதில் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தயிரை கீழே இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும். கொதிக்கும் போது சேர்த்தால் நீர்த்து விடும். 
 
மேலே 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி, மேலும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலையை சேர்த்து அவியலை நன்கு கலக்கவும்.
 
புளியோதரை, தேங்காய் சாதம் போன்ற பிசைந்த சாத வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
காய்கறிகளை குக்கரிலும் வேக விடலாம். வெயிட்டைப் போட்டு 2 சத்தம் விட்டால் போதும்.
 

No comments:

Post a Comment