தேவை:
குதிரைவாலி அரிசி --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப்
நெய் -- 8 டீஸ்பூன்
பால் -- ¼ கப்
கெட்டியான தேங்காய்ப்பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன்
இஞ்சி விழுது -- ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 கொத்து
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
பயத்தம்பருப்பு --¼ கப்
நெய் -- 8 டீஸ்பூன்
பால் -- ¼ கப்
கெட்டியான தேங்காய்ப்பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன்
இஞ்சி விழுது -- ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 கொத்து
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
குதிரை வாலி அரிசியுடன்
பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 4
கப் தண்ணீர், பால், தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.
குக்கரைத் திறந்து அதில் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். 4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து முந்திரிபருப்பு,
காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, பொடியாக
நறுக்கிய இஞ்சி, முழுமிளகு, ஜீரகம், கறிவேப்பிலை
தாளித்து பொங்கலில் கொட்டவும். பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில் எல்லாம்
சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள நெய் விட்டு
சூடாகப் பரிமாறவும். கமகம வெண்பொங்கல் ரெடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக