பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஜனவரி, 2020

அவல் ஸ்வீட் பொங்கல்


தேவையான பொருட்கள்:
அவல் - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 150 கிராம்
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் பழம் - 20
தேங்காய் பால் - 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் - 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.

வியாழன், 29 டிசம்பர், 2016

ஜவ்வரிசி ட்ரை கலர் பொங்கல்

தேவை
ஜவ்வரிசி -- 1 கப்
பயத்தம்பருப்பு  --  1/8 கப்
மைசூர் பருப்பு (Red Masoor Dhal)  --  1/8 கப்
இஞ்சி  -- சிறுதுண்டு
பச்சை மிளகாய்  --  2
மிளகு  --  6 - 8
மிளகு சீரகப்பொடி  --  1 டீஸ்பூன்
கருவேப்பிலை --  1 கொத்து
முந்திரி, திராட்சை  --  தலா 10
நெய்  --6 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி  --  சிறிது
பொடியாக நறுக்கிய காரட், காலிஃபிளவர், உரித்த பச்சைபட்டாணி -- 1/4 கப்
உப்பு

செய்முறை
பருப்புகளை வெறும் வாணலியில் சற்று வறுத்து, அவற்றுடன் காய்கறிகள் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
ஜவ்வரிசியை தனியாக லேசாக வறுத்து வேகவிடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்த்து உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கிளறவும்.

இஞ்சி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக்கவும்.பாதி நெய்யை சுடவைத்து அதில் இஞ்சி, ப. மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, மிளகு சீரகப்பொடி தாளித்து கொட்டவும். மீத நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
இதில் வெங்காயம், கரம் மசாலா சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


திங்கள், 26 டிசம்பர், 2016

கல்யாண பொங்கல்

தேவை:
பச்சை அரிசி  --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப் 
நெய் -- 8 டீஸ்பூன் 
பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன் 
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு 
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன் 
கறிவேப்பிலை -- 1 கொத்து 
கடுகு - 2 டீஸ்பூன் 
மஞ்சள்பொடி - 1½ டீஸ்பூன் 
உப்பு -- தேவையான அளவு

செய்முறை 
அரிசியுடன்  பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 3½ கப் தண்ணீர், பால்,  சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.

குக்கரைத் திறந்து அதில் தேவையான உப்பு, மஞ்சள்பொடி  சேர்க்கவும்.  4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து  முந்திரிபருப்பு,  காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். 

மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி,  முழுமிளகு, ஜீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். 

பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன் மிளகுபொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள  நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். கமகம கல்யாண பொங்கல் ரெடி!

இது கல்யாணங்களில் மங்களகரமாக பரிமாறப்படும்.



வியாழன், 22 டிசம்பர், 2016

ரவா சேமியா தேங்காய்ப்பால் பொங்கல்



தேவை 
வறுத்த ரவா -- 1கப்
வறுத்த சேமியா -- 1/2 கப்
கடலைப்பருப்பு -- 1/4 கப்
துவரம்பருப்பு -- 5 டீஸ்பூன்
இஞ்சி --  சிறுதுண்டு
முந்திரி -- 10
திராட்சை -- 10
தேங்காய்ப்பால் -- 1/2 கப்
கறிவேப்பிலை -- 1 கொத்து
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப்பொடி -- 1 டீஸ்பூன்
நெய் -- 6 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு

செய்முறை
கடைகளில் ரோஸ்டட் ரவாவும், சேமியாவும் கிடைக்கும். அவற்றை உபயோகித்து பொங்கல் செய்யலாம்.
பருப்புகளை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். குக்கரில் வேகவிடவும்.

2 கப் தண்ணீருடன் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சேமியாவை சேர்க்கவும். 
முக்கால் அளவு வெந்ததும், அத்துடன் ரவாவை சேர்த்து வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

இரண்டையும் சேர்த்து வேகவிட்டால் ரவை அதிகம் வெந்து கூழாகி விடும்.

வாணலியில் நெய்யை விட்டு இஞ்சி,மிளகு, முந்திரி, திராட்சை, மிளகு சீரகப்பொடி, கறிவேப்பிலை போட்டு வதக்கி  பொங்கலில் கொட்டி நன்கு கலக்கவும்.

ரவா,சேமியா சரி அளவு சேர்த்தும் செய்யலாம்.

சட்னியுடன் பரிமாறவும்.



வெள்ளி, 6 மே, 2016

வெண் பொங்கல்

தேவை: குதிரைவாலி அரிசி  --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப் 
நெய் -- 8 டீஸ்பூன் 
பால் -- ¼ கப்
கெட்டியான தேங்காய்ப்பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன் 
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு 
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன் 
இஞ்சி விழுது -- ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 கொத்து 
உப்பு -- தேவையான அளவு

செய்முறை 
குதிரை வாலி அரிசியுடன்  பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 4 கப் தண்ணீர், பால், தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும். குக்கரைத் திறந்து அதில் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.  4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து  முந்திரிபருப்பு,  காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி,  முழுமிளகு, ஜீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன் மிளகு, சீரகப்பொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள  நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். கமகம வெண்பொங்கல் ரெடி!

சர்க்கரைப் பொங்கல்

தேவை
அரிசி-1 கப் 
பயத்தம்பருப்பு -¼ கப் 
வெல்லம்-1 கப்
பனங்கல்கண்டு -½ கப்
பால்- ½ கப்
தேங்காய்ப்பால் - ½ கப்
முந்திரி, திராட்சை -15 
நெய்-¼ கப்
ஏலக்காய்-8
ஜாதிக்காய்
குங்குமப்பூ- 5,6 இதழ்கள்,
பச்சைகல்பூரம்-சிறுதுளி

செய்முறை
அரிசி, பயத்தம்பருப்பை தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். 
ஒரு மூடி தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். 
பாலுடன் 4½  கப் தண்ணீர் சேர்த்து  வைத்து, கொதித்ததும், அரிசி, பருப்பைக்  களைந்து குக்கரில் வைத்து 5 சத்தம் விடவும். 
பின் குக்கரைத் திறந்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறவும். 
அதில் பொடிசெய்த வெல்லம் மற்றும் பனங்கல்கண்டு சேர்க்கவும். 
கரைந்து  நன்கு சேர்ந்துகொண்டு, தளதள என்று கொதிக்கும்போது இறக்கவும்.  
நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். ஜாதிக்காயை நெய்யில் வறுத்து, ஏலக்காய், ப.கல்பூரம்  சேர்த்துப் பொடி செய்து  சேர்க்கவும். 
குங்குமப்பூவை சிறுதுளி பாலில்  கரைத்து விடவும். 
மீதமுள்ள நெய்யையும் பொங்கலில் சேர்த்து கலக்கவும். 
பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ரவா சேமியா பொங்கல்


தேவை 
வறுத்த ரவா -- 1கப்
வறுத்த சேமியா -- 1/2 கப்
பயத்தம்பருப்பு -- 1/2 கப்
இஞ்சி --  சிறுதுண்டு
முந்திரி -- 10
திராட்சை -- 10
தேங்காய்ப்பால் -- 1/2 கப்
கறிவேப்பிலை -- 1 கொத்து
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப்பொடி -- 1 டீஸ்பூன்
நெய் -- 4 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு

செய்முறை
கடைகளில் ரோஸ்டட் ரவாவும், சேமியாவும் கிடைக்கும். அவற்றை உபயோகித்து பொங்கல் செய்யலாம்.
பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். குக்கரில் வேகவிடவும்.
2 கப் தண்ணீர்,  தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சேமியாவை சேர்க்கவும். முக்கால் அளவு வெந்ததும், அத்துடன் ரவாவை சேர்த்து வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
இரண்டையும் சேர்த்து வேகவிட்டால் ரவை அதிகம் வெந்து கூழாகி விடும்.
வாணலியில் நெய்யை விட்டு இஞ்சி,மிளகு, முந்திரி, மிளகு சீரகப்பொடி, கறிவேப்பிலை போட்டு வதக்கி  பொங்கலில் கொட்டி நன்கு கலக்கவும்.
சட்னி, கொத்சுடன் பரிமாறவும்.








 



திங்கள், 29 பிப்ரவரி, 2016

மல்டி-தால் வெஜிடபிள் பொங்கல்

மல்டி - தால் வெஜிடபிள் பொங்கல்
தேவை

பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு -  1/8  கப்
பாசிப்பருப்பு -  1/8  கப்
கடலை பருப்பு -  5 டீஸ்பூன்
தக்காளி - 2
கேரட் - 1
குடமிளகாய் - 1
நறுக்கிய கோஸ் -  1/4  கப்
நறுக்கிய பீன்ஸ் -  1/4  கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்துமல்லி
பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 4-5 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
உப்பு

செய்முறை

சிறிய குக்கர் அல்லது ப்ரெஷர் பேனில் நெய் ஊற்றி சீரகம் , மிளகுத்தூள், பெருங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , கொத்துமல்லி , தக்காளி எல்லாம் போட்டு வதக்கவும்.

பிறகு குடமிளகாய், கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாம் போட்டு தேவையான  உப்பு போட்டு 4 கப் தண்ணீர், பால்  ஊற்றி , அரிசி + பருப்பு வகைகளை போட்டு, குக்கரை மூடி,  5 விசில் வைக்கவும். குக்கர் ஆறியதும் திறந்து (விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரி தாளித்து ) கிளறிவிட்டு, தேங்காய் / வெங்காய சட்னியுடன் பரிமாறவும்


ஐந்தரிசி பேரீச்சை பொங்கல்

ஐந்தரிசி பேரீச்சை பொங்கல்

பச்சரிசி, வரகரிசி, குதிரைவாலி, சாமை, தினைஅரிசி எல்லாம் சம அளவில் ஒரு கப் (each 1/5) எடுத்து லேசாக வறுக்கவும்.

ப.பருப்பு, மைசூர் பருப்பு இரண்டும் சம அளவில் 1/4 கப் லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து 1 1/2கப் தேங்காய்ப்பால், 21/2கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

2 ப.மிளகாய், சிறுதுண்டு இஞ்சி, 6 மிந்திரி, 1/2 ஸ்பூன் கசகசா, 1 தக்காளி சேர்த்து அரைக்கவும்.

4 ஸ்பூன் நெய்யில் இஞ்சித் துண்டுகள், 8 மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை வதக்கி பொங்கலில் சேர்க்கவும்.மேலும் 2 ஸ்பூன் நெய்யில் மிந்திரி, திராட்சை,சிறு துண்டுகளாக்கிய( 6) பேரீச்சை வறுத்து அதிலேயே அரைத்த விழுது சேர்த்து சற்று வதக்கி பொங்கலில் கொட்டி தேவையான உப்பு,பெருங்காயப்பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள்  நன்கு கிளறவும்.


சுவையான ஐந்தரிசி  டேட்ஸ் பொங்கல் ரெடி!

பாதாம் கேசர் பொங்கல்

பாதாம் கேசர் பொங்கல்

தேவை

அரிசி....1கப்
ப.பருப்பு...1/4 கப்
பாதாம்...10
மிந்திரி....20
கசகசா...1/4 டீஸ்பூன்
பிஸ்தா...10 
திராட்சை...10
பால்....1/2 கப்  
தேங்காய்ப்பால்.....1/2 கப்
கல்கண்டு....1 1/2 கப்
ஏலப்பொடி....சிறிது
குங்குமப்பூ....சில இதழ்கள்
நெய்....1/8கப்                                  

செய்முறை

பாதாம், கசகசா, 10 முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரிசி, ப.பருப்பை 1 ஸ்பூன் நெய்யில் சற்று வறுத்து 3 கப் நீர், பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

குக்கரிலிருந்து எடுத்து அத்துடன் தேங்காய்ப்பால், அரைத்த பொடி சேர்த்து கேஸில் வைத்து 5 நிமிடம் கிளறி சேர்ந்து கொண்டதும் அதில் கல்கண்டைப் பொடி செய்து சேர்த்துக் கிளறவும்.

கொஞ்சம் கெட்டியானதும் நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

ஏலப்பொடி சேர்த்து மீதமுள்ள முந்திரி,பேரீச்சை,   திராட்சை,பிஸ்தா  வறுத்துப் போடவும். குங்குமப்பூவை சூடாக இருக்கும்போதே போட்டு கலக்கவும்.

சுவையான, ரிச்சான பாதாம் கேசர் பொங்கல் தயார்.





ட்ரை - ஃப்ரூட்ஸ் ஸ்வீட் பொங்கல்

ட்ரை - ஃப்ரூட்ஸ்   ஸ்வீட் பொங்கல்
தேவை

அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 2 tbsp
காய்ச்சிய பால் - 2 கப்
முந்திரி - 5
பாதாம் - 5
பேரீச்சை - 5
உலர் திராட்சை - 2 tsp
நெய் - 3 tbsp
சர்க்கரை - 1 கப்

செய்முறை

அரிசி மற்றும் கடலை பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாலை திக்காக  நன்கு காய்ச்சி கொள்ளவும். பேரீச்சை, உலர் திராட்சை மற்றும் ஊற வைத்த முந்திரி - பாதாமை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வெண்கலப்பானை அல்லது வாணலியில் 1 கப் பால் + 2 கப் தண்ணீர் விட்டு , கொதித்ததும், அடுப்பை sim ல் வைத்து , பொடித்ததைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறவும். நன்றாகக் குழைந்து வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும். பிறகு அரைத்த விழுதை கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி , மீதி 1 கப் பாலை சேர்த்து கலக்கவும். பால் எல்லாம் நன்றாக உறிஞ்சிய பிறகு அடுப்பை அணைத்து மேலாக நெய்யை ஊற்றி கிளறவும். (விருப்பப்பட்டால் நெய்யில்  முந்திரி தாளிக்கலாம்).


வியாழன், 25 பிப்ரவரி, 2016

குதிரைவாலி காரப் பொங்கல்

குதிரைவாலி காரப் பொங்கல்

செய்முறை

ஒரு கப் குதிரைவாலி அரிசி, 1/8  கப் ப.பருப்பு வறுத்து அத்துடன் பச்சை பட்டாணி ,2 1/2 கப் நீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

ஒரு சிறு துண்டு இஞ்சி, 2 ப.மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

2 தக்காளிகளை பொடியாக நறுக்கி சிறிது நெய்யில் வதக்கவும்.

பொங்கலை குக்கரில் இருந்து எடுத்து நன்கு கிளறவும்.

4 ஸ்பூன் நெய்யில் மிளகு, நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.

வதக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்த்து கேஸில் வைத்து நன்கு கிளறவும்.

சுவையான, சத்தான குதிரைவாலி காரப் பொங்கல் தயார்.




குதிரைவாலி வெண் பொங்கல்

குதிரைவாலி வெண் பொங்கல்

தேவை

குதிரைவாலி அரிசி  --1 கப்
பயத்தம்பருப்பு --1/4 கப் 
நெய் -- 8 டீஸ்பூன் 
பால் -- 1/4 கப்
கெட்டியான தேங்காய்ப்பால் -- 1/4 கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன் 
சீரகம் -- 1 டீஸ்பூன் 
இஞ்சி -- 1 சிறிய துண்டு 
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --1/2 டீஸ்பூன் 
இஞ்சி விழுது -- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 கொத்து 
உப்பு -- தேவையான அளவு

செய்முறை

குதிரை வாலி அரிசியுடன்  பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 4 கப் தண்ணீர், பால், தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும். குக்கரைத் திறந்து அதில் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.  4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து  முந்திரிபருப்பு,  காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி,  முழுமிளகு, ஜீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். பொங்கலை மேலும் சுவையாக்க, 1/2 டீஸ்பூன் மிளகு, சீரகப்பொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள  நெய்  விட்டு சூடாகப் பரிமாறவும்.

கமகம வெண்பொங்கல் ரெடி!


பனங்கற்கண்டு பொங்கல்

பனங்கற்கண்டு  பொங்கல்

தேவை

அரிசி-1 கப் 
பயத்தம்பருப்பு -1/4 கப் 
வெல்லம்-1 கப்
பனங்கல்கண்டு -1/2 கப்
கல்கண்டு-1/2 கப் 
பால்- 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
முந்திரி, திராட்சை -15 
நெய்-1/4 கப் 
ஏலக்காய்-8, ஜாதிக்காய்
குங்குமப்பூ- 5, 6 இதழ்கள்
பச்சைகல்பூரம்-சிறுதுளி

செய்முறை

அரிசி, பயத்தம்பருப்பை தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு மூடி  அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். பாலுடன் 4 1/2  கப் தண்ணீர் சேர்த்து  வைத்து, கொதித்ததும், அரிசி, பருப்பைக்  களைந்து குக்கரில் வைத்து 5 சத்தம் விடவும். பின் குக்கரைத் திறந்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறவும். அதில் பொடிசெய்த வெல்லம் மற்றும் பனங்கல்கண்டு சேர்க்கவும். கரைந்து  நன்கு சேர்ந்துகொண்டு, தளதள என்று கொதிக்கும்போது இறக்கவும்.

நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்துப் போடவும். ஜாதிக்காயை நெய்யில் வறுத்து, ஏலக்காய், ப.கல்பூரம்  சேர்த்துப் பொடி செய்து  சேர்க்கவும். குங்குமப்பூவை சிறுதுளி பாலில்  கரைத்து விடவும். மீதமுள்ள நெய்யையும் பொங்கலில் சேர்த்து கலக்கவும். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.


திங்கள், 4 மே, 2015

கற்கண்டு ஃப்ரூட் பொங்கல்


தேவை

தினை - 1 கப்  
பயத்தம்பருப்பு- ¼ கப், 
பனங்கற்கண்டு -1 கப்
கல்கண்டு - ½ கப்
பால்- 1 கப் 
தேங்காய்ப்பால் - ½ கப்
நெய் - ½ கப்
ஏலக்காய்பொடி- 2 தேக்கரண்டி 
மிந்திரி பருப்பு- 10
திராட்சை - 10 
பாதாம் - 10 
சிறியதாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பேரிச்சை பழத் துண்டுகள் -  1 கப்
குங்குமப்பூ - சில இதழ்கள் 

செய்முறை

தினையை வெறும் வாணலியில் வாசனைவர வறுக்கவும். பயத்தம்பருப்பையும் சற்று வறுத்து இரண்டையும் களைந்து குக்கரில் பாலுடன் 1½ கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

அத்துடன் தேங்காய்ப்பாலை சேர்த்து அடுப்பில் வைத்து கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறவும். பனங்கற்கண்டு மற்றும் வெள்ளைக் கல்கண்டை பொடியாக்கி அத்துடன் சேர்த்துக் கிளறவும். 

மிந்திரி, பாதாமை சிறு துண்டுகளாக்கவும். ¼ கப் நெய்யை சுடவைத்து அதில் மிந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.

மீதமுள்ள நெய்யில் பழத்துண்டுகளை 2 நிமிடம் வதக்கி அத்துடன் சேர்த்து கிளறவும். ஏலப்பொடி, குங்குமப்பூவை சேர்க்கவும். சுவையான தினைப் பொங்கல் தயார்! 

சிறு தானியங்களான தினை , வரகு, குதிரைவாலி, சாமை போன்றவற்றில் சத்து அதிகம். அரிசிக்கு மாற்றாக இவற்றில் பொங்கல் செய்து சாப்பிடுவது நல்லது. இதே போன்று இத்தானியங்களில் வெண்பொங்கலும் செய்யலாம்.