மல்டி - தால்
வெஜிடபிள் பொங்கல்
தேவை
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு -
1/8 கப்
பாசிப்பருப்பு -
1/8 கப்
கடலை பருப்பு - 5 டீஸ்பூன்
தக்காளி - 2
கேரட் - 1
குடமிளகாய் - 1
நறுக்கிய கோஸ் -
1/4 கப்
நறுக்கிய பீன்ஸ் -
1/4 கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்துமல்லி
பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 4-5 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
பால் - 1/4 கப்
உப்பு
செய்முறை
சிறிய குக்கர் அல்லது ப்ரெஷர் பேனில் நெய் ஊற்றி சீரகம் , மிளகுத்தூள், பெருங்காயம் ,
பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , கொத்துமல்லி , தக்காளி எல்லாம் போட்டு வதக்கவும்.
பிறகு குடமிளகாய், கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாம்
போட்டு தேவையான உப்பு போட்டு 4 கப் தண்ணீர், பால் ஊற்றி , அரிசி + பருப்பு வகைகளை போட்டு, குக்கரை மூடி,
5 விசில் வைக்கவும். குக்கர் ஆறியதும் திறந்து (விருப்பப்பட்டால்
நெய்யில் முந்திரி தாளித்து ) கிளறிவிட்டு, தேங்காய் /
வெங்காய சட்னியுடன் பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக