வியாழன், 25 பிப்ரவரி, 2016

குதிரைவாலி காரப் பொங்கல்

குதிரைவாலி காரப் பொங்கல்

செய்முறை

ஒரு கப் குதிரைவாலி அரிசி, 1/8  கப் ப.பருப்பு வறுத்து அத்துடன் பச்சை பட்டாணி ,2 1/2 கப் நீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

ஒரு சிறு துண்டு இஞ்சி, 2 ப.மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

2 தக்காளிகளை பொடியாக நறுக்கி சிறிது நெய்யில் வதக்கவும்.

பொங்கலை குக்கரில் இருந்து எடுத்து நன்கு கிளறவும்.

4 ஸ்பூன் நெய்யில் மிளகு, நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.

வதக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்த்து கேஸில் வைத்து நன்கு கிளறவும்.

சுவையான, சத்தான குதிரைவாலி காரப் பொங்கல் தயார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக