வியாழன், 25 பிப்ரவரி, 2016

பனங்கற்கண்டு பொங்கல்

பனங்கற்கண்டு  பொங்கல்

தேவை

அரிசி-1 கப் 
பயத்தம்பருப்பு -1/4 கப் 
வெல்லம்-1 கப்
பனங்கல்கண்டு -1/2 கப்
கல்கண்டு-1/2 கப் 
பால்- 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
முந்திரி, திராட்சை -15 
நெய்-1/4 கப் 
ஏலக்காய்-8, ஜாதிக்காய்
குங்குமப்பூ- 5, 6 இதழ்கள்
பச்சைகல்பூரம்-சிறுதுளி

செய்முறை

அரிசி, பயத்தம்பருப்பை தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு மூடி  அரைத்து கெட்டிப்பால் எடுக்கவும். பாலுடன் 4 1/2  கப் தண்ணீர் சேர்த்து  வைத்து, கொதித்ததும், அரிசி, பருப்பைக்  களைந்து குக்கரில் வைத்து 5 சத்தம் விடவும். பின் குக்கரைத் திறந்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கிளறவும். அதில் பொடிசெய்த வெல்லம் மற்றும் பனங்கல்கண்டு சேர்க்கவும். கரைந்து  நன்கு சேர்ந்துகொண்டு, தளதள என்று கொதிக்கும்போது இறக்கவும்.

நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்துப் போடவும். ஜாதிக்காயை நெய்யில் வறுத்து, ஏலக்காய், ப.கல்பூரம்  சேர்த்துப் பொடி செய்து  சேர்க்கவும். குங்குமப்பூவை சிறுதுளி பாலில்  கரைத்து விடவும். மீதமுள்ள நெய்யையும் பொங்கலில் சேர்த்து கலக்கவும். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக