கேரட் தோசை
தேவை
ப.அரிசி...1கப்
பு.அரிசி...1/2 கப்
கேரட் துருவல்...1/2 கப்
பெ.வெங்காயம்...சிறியது 1
மி.வற்றல்....3
ப.மிளகாய்....2
சீரகம்...1டீஸ்பூன்
உப்பு
கடுகு...1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணை, நெய்
செய்முறை
இரண்டு அரிசியையும் ஒன்றாக ஊறவைத்து, அத்துடன் மற்ற சாமான்களை சேர்த்து நைஸாக அரைத்து ,
கடுகு தாளித்து,கறிவேப்பிலை சேர்த்து நீர்க்க
கரைத்து ரவா தோசை போல் வார்க்கவும். விருப்பப்பட்டால் நெய் ரோஸ்ட் வரத்து
சாப்பிடலாம்.
அரைத்தவுடன் வார்க்கலாம்.
தேங்காய், வெங்காய
சட்னியுடன் சாப்பிடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக