ஸ்பைசி தோசை
தேவை
பச்சரிசி – 1 /2 கப்
துவரம்பருப்பு – 1 /4 கப்
தேங்காய் – 1 /2 மூடி
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 10
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறு துண்டு
வெங்காயம் -- 1
வெங்காயம் -- 1
மல்லித்தழை, கறிவேப்பிலை
– சிறிது
செய்முறை :
அரிசி, பருப்பு
இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை
பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும். தேவையெனில்
சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக