வியாழன், 25 பிப்ரவரி, 2016

தயிர் வடை

தயிர்  வடை
தேவை

உளுத்தம்பருப்பு -- 1 கப்
உப்பு --  தேவையான அளவு                      
பெருங்காயப்பொடி -- 1/4 டீஸ்பூன் 
புளிக்காத கெட்டித் தயிர் -- 1 கப்
பால் -- 1/4 கப்

அரைக்க

மிளகாய் -- 2
இஞ்சி -- ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் -- 1/4 கப்
முந்திரிபருப்பு -- 8
சீரகம் -- 1/2 தேக்கரண்டி 
உப்பு --  தேவையான அளவு
எண்ணை  --  வேகவிட 

அலங்கரிக்க....

சீரகப்பொடி காரப்பொடிபொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பூந்தி

செய்முறை

ஒரு கப் உளுத்தம்பருப்பைக்  களைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.  தண்ணீரை வடித்துவிட்டு நைசாக, கெட்டியாக  அரைக்கவும்.கடைசியில் உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து  எடுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்து, தேவையான உப்பு, தயிர்  சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பாலை சேர்க்கவும்.

 எண்ணையைக் காயவைத்து, வடைகளைத் தட்டி  வெதுவெதுப்பான நீரில் ஒரு நிமிடம்  போட்டு, கலந்து வைத்துள்ள தயிர்க் கலவையில் போடவும். ஊறியதும் எடுத்து வேறு தட்டில் வைக்கவும்.

மேலே அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாகத் தூவி பரிமாறவும். இதை ஃ ப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக