வியாழன், 25 பிப்ரவரி, 2016

வரகு கருப்பட்டி பாயசம்

வரகு கருப்பட்டி பாயசம்
தேவை

வரகு....1/4 கப்
கருப்பட்டி....1/2 கப்
தேங்காய்ப்பால்...1/2 கப்
பால்....1கப்
ஏலப்பொடி
நெய்...2டீஸ்பூன் முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள்
குங்குமப்பூ....சில இதழ்கள்

செய்முறை

வரகை லேசாக வறுத்து, பாலுடன் 11/2கப் நீர் சேர்த்து குக்கரில் ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேஸை சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெளியில் எடுத்து சற்று கொதித்ததும், அத்துடன் தே.பால் சேர்க்கவும். கருப்பட்டியை தூள் செய்து சேர்த்து 10நிமிடம் கிளறி இறக்கவும். ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை,பாதாம் வறுத்து சேர்க்கவும். குங்குமப்பூ போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக