திங்கள், 29 பிப்ரவரி, 2016

அவல் வடாம்

அவல் வடாம்
தேவை

கெட்டி அவல் - ஒரு கிலோ
ஜவ்வரிசி - 100 கிராம்
கசகசா - 25 கிராம்
கொத்தமல்லி - 1 கட்டு
பூசணி பத்தை - 1
உப்பு - கால் கப்
பச்சைமிளகாய் - 50 கிராம்
எலுமிச்சம் பழம் - 2
பெருங்காயம் - சிறிதளவு
புளித்த மோர் - 1/4 கப்

செய்முறை

அவலை 10 நிமிடம் ஊறவைத்துக் களைந்து பிழிந்து வைக்கவும்.
ஜவ்வரிசியை தேவையான நீர் விட்டு கூழாகக் கிளறவும்.

கொத்துமல்லியை தழையாக எடுத்து அலம்பிப் பொடியாக நறுக்கவும்.

உப்பு, ப. மிளகாயை நைஸாக அரைத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.

பிழிந்த அவலுடன்  ஜவ்வரிசி கூழ், பச்சைமிளகாய் விழுது, கசகசா, மோர், கொ.மல்லி தழை இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

பூசணிக்காயின் தோல் நீக்கி பிறகு காரட் துருவியில் துருவி, நன்கு தண்ணியில்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

எல்லாவற்றையும் ஒன்றாய் கலந்து லேசாக உருட்டி  3 நாள் காய வைக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக