குதிரைவாலி வெண் பொங்கல்
தேவை
குதிரைவாலி
அரிசி --1 கப்
பயத்தம்பருப்பு
--1/4 கப்
நெய்
-- 8 டீஸ்பூன்
பால்
-- 1/4 கப்
கெட்டியான
தேங்காய்ப்பால் -- 1/4 கப்
பெருங்காயப்பொடி
-- சிறிது
மிளகு
--1 டீஸ்பூன்
சீரகம்
-- 1 டீஸ்பூன்
இஞ்சி
-- 1 சிறிய துண்டு
முந்திரி
பருப்பு -- 12
திராட்சை
-- 10
மிளகு
சீரகப்பொடி --1/2 டீஸ்பூன்
இஞ்சி
விழுது -- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
-- 1 கொத்து
உப்பு
-- தேவையான அளவு
செய்முறை
குதிரை
வாலி அரிசியுடன் பயத்தம்பருப்பு
சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 4 கப்
தண்ணீர், பால், தேங்காய்ப்பால்
சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய
வேகவிடவும். குக்கரைத் திறந்து அதில் இஞ்சி விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தேவையான உப்பு சேர்க்கவும். 4 டீஸ்பூன் நெய்யைக்
காயவைத்து முந்திரிபருப்பு, காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். மேலும் 2 டீஸ்பூன்
நெய்யில் பெருங்காயப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி,
முழுமிளகு, ஜீரகம், கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். பொங்கலை மேலும் சுவையாக்க,
1/2 டீஸ்பூன் மிளகு, சீரகப்பொடி நெய்யில்
தாளிக்கவும். பொங்கலில் எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி
நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள நெய் விட்டு சூடாகப்
பரிமாறவும்.
கமகம
வெண்பொங்கல் ரெடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக