மிஷ்டிதோய் ( வங்காளம் )
வங்காளத்தில் பாலால் செய்யப்படும் ரசகுல்லா, குலாப் ஜாமூன் இவை மிகப்
பிரசித்தம். இது ஒரு வித்தியாசமான சுவையுள்ள சுலப இனிப்பு.
தேவை
பால் – 1 லிட்டர்
தயிர் – 25 கிராம்
சர்க்கரை – 150 கிராம்.
செய்முறை:
காஸை சிம்மில் வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
அடிக்கடி கிளறி விடவும். பாலின் அளவு பாதியாக வற்றி, பழுப்பு நிறமானதும் சர்க்கரை
சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சற்று கொதித்தபின், ஒரு
அகலமான காஸரோலில் கொட்டி ஆறவிடவும். வெதுவெதுப்பான சூட்டில் தயிரை சேர்த்து மூடி,
அசையாமல் 10 மணி நேரம் வைத்து, பின்
ஃபிரிட்ஜில் வைத்து, கப்பில் குளிர்ச்சியாக பரிமாறாவும்.
(மேலே சிறு துண்டுகளாக்கிய பாதாம், மிந்திரி சேர்க்கலாம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக