இனிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

இந்த ஏகாதசிக்கு எங்காத்து குட்டிக் கண்ணனுக்கு ட்ரைஃப்ரூட்ஸ் பர்பி செய்து நிவேதனம் செய்தேன். அதன் செய்முறை இதோ...

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

பாதாம்,மிந்திரி, பிஸ்தா...தலா 1/4 கப்,
வால்நட்...6
அத்திப்பழம்(figs)..5
பேரீச்சை..5
திராட்சை..10
தேங்காய்த்துருவல்..4டீஸ்பூன்
ஏலப்பொடி
நெய்..2டீஸ்பூன்
பாதாம்,மிந்திரி,பிஸ்தா,வால்நட் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதை எடுத்துவிட்டு  அதிலேயே துண்டுகளாக்கிய அத்தி,பேரீச்சை மற்றும் திராட்சையை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நைஸாக அரைக்கக் கூடாது.
வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து சற்று வதக்கி, அதில் அரைத்த பாதாம் கலவையைச்  சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி அதில் பேரீச்சை கலவை சேர்த்துக் கிளறவும். இரண்டு கலவையும் சேர்ந்து கொள்ள அடுப்பை சிறியதாக வைத்து 5நிமிடம்  தீயாமல்  கவனமாகக்  கிளற வேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவும்.
கீழே இறக்கி வைத்து  நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில்,கையில் நெய் தடவிக் கொண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு நீள்வட்டமாகச் செய்யவும்.
நன்கு ஆறியதும் அவற்றை வட்டமாக நறுக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சதுர துண்டுகளாகவும் செய்யலாம். ஃப்ரிட்ஜ்ல் வைத்து உபயோகிக்கவும்.


ஞாயிறு, 3 ஜூலை, 2016

மலாய் பேடா

பால் – 1 லிட்டர் 
சீனி – 150 கிராம்
சோளமாவு – 1 டீஸ்பூன் (நீரில் கரைக்கவும்)
ஏலப்பொடி, பிஸ்தா. 

செய்முறை
பாலை அடுப்பில் வைத்து கோவா பதம் வரும் வரை கிளறவும். அடுப்பை சிறிதாக வைத்து அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

நல்ல கெட்டியானதும், சர்க்கரை, சோளமாவு சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். 

கெட்டியாக பந்து போலான கலவையை ஆற விடவும். அவற்றை சிறிய உருண்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அமுக்கி, அதில் ஒரு பிஸ்தா துண்டை வைத்து எடுத்து வைக்கவும். 

இதில் சர்க்கரை சேர்க்கும் போது, சில இதழ்கள் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்தால் அதற்கு பெயர் ‘கேஸர் மலாய் பேடா’. செய்வதற்கு எளிய இனிப்பு இது!

காஜர் கா ஹல்வா

காஜர் என்பது கேரட். இது பஞ்சாபில் செய்யப்படும் இனிப்பு.
தேவை 
கேரட் துருவல் – 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 11/2 கப்
நெய் -1 கப்
கோவா - 1/4 கப்
மிந்திரி – 15
திராட்சை – 15, ஏலப்பொடி, குங்குமப்பூ.
செய்முறை
கேரட் துருவலை பாலில் குக்கரில் வேக விடவும். வெந்த கேரட்டை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 

அடி கனமான பாத்திரத்தில் இதைப் போட்டு கொதிக்க விட்டு, சற்று கெட்டியானதும் இதில் கோவா, சர்க்கரை போட்டு, சேர்ந்து கொண்டதும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும். 

ஹல்வா பதம் வந்ததும் மிந்திரி, திராட்சை, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

ஞாயிறு, 19 ஜூன், 2016

பீட்ரூட் ஹல்வா

தேவை
துருவிய  பீட்ரூட் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - 8 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 6
சர்க்கரையில்லாத பால்கோவா - 2 டேபிள்ஸ்பூன் (உதிர்த்துக் கொள்ளவும்).

செய்முறை
அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து, துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் பாலுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

வாணலியில் போட்டு கிளறி, சர்க்கரை சேர்த்துக் கிளறி சேர்ந்து கொண்து, கெட்டியானதும் உதிர்த்த பால்கோவா சேர்த்து நெய்,ஏலப்பொடி, மிந்திரி   சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.




திங்கள், 30 மே, 2016

ரவா லட்டு

தேவை
ரவை  -  1 கப்
சர்க்கரை  -  1 1/4 கப்
நெய்  -  1/2 கப்
ஏலப்பொடி  -  1 டீஸ்பூன்
முந்திரி  -  15
திராட்சை  - 10

செய்முறை
5 டீஸ்பூன் நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
சர்க்கரையையும்  மிக்சியில் பொடி செய்து சலிக்கவும். ரவை மாவுடன் சர்க்கரைபொடி, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து அத்துடன் சேர்த்து, நெய்யை நன்கு சுடவைத்து மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

விருப்பமானால் அரை கப் தேங்காயை நெய்யில் வறுத்து சேர்த்து லட்டு பிடிக்கலாம்.
வித்யாசமான சுவையுடன் இருக்கும்.


ஞாயிறு, 29 மே, 2016

அசோகா அல்வா

அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான  இனிப்பு. அதன் செய்முறை எழுதியுள்ளேன்.
தேவை
பயத்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
நெய் - 2 கப்
பால்  - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -15
திராட்சை  -  10
சீவிய பாதாம்  - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ  - சில இதழ்கள்.
கேசரி பவுடர் - 4 சிட்டிகை
செய்முறை
பயத்தம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் ஒரு கப் தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து  நன்கு குழைய வேக வைக்கவும்.

2 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை வறுத்து எடுக்கவும்.அதில் மேலும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து  சுடவைத்து,கோதுமை மாவை பொரித்தாற்போல்  வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஒரு வாணலியில் வெந்த பயத்தம்பருப்பு போட்டு நன்கு மைய மசிக்கவும். பருப்பு அரை வேக்காட்டில் இருக்கக் கூடாது. அதனுடன் பொரித்த கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டும் சேர்ந்து கொண்டு கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும்.கேசை சிறிதாக்கி கை விடாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டும் சமயம் சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளறவும். கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்க்கவும்.

கரண்டியில்  ஒட்டாமல் நெய் பிரிந்து நன்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

விருப்பப் பட்டால் திராட்சை, பாதாம் துண்டுகள் நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான திருவையாறு ஒரிஜினல் அசோகா ஹல்வா வாயில் போட்டால் கரையும்.




வியாழன், 26 மே, 2016

ஃப்ரூட் கேசரி

தேவை
ரவை - 1 கப்
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 /2 கப்
திராட்சை - 50 கிராம் 
அன்னாசி துண்டுகள்  - 1/4 கப்
சர்க்கரை - 11/4  கப்
நெய் - 1/2  கப்
முந்திரி - 10
பால்  - 1/2 கப்
தண்ணீர்  -  1 1/2 கப்
ஏலப்பொடி - 2  சிட்டிகை
குங்குமப்பூ - சில இதழ்கள்.
செய்முறை
ஆப்பிள்,  திராட்சையை  சிறு  துண்டுகளாக்கவும்.அவற்றை 1/2 கப் சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.
முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு  முந்திரி வறுத்து எடுத்து  ரவையை  சற்று சிவக்க வறுக்கவும்.



அதில் பால் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.இல்லையெனில் கட்டி தட்டிவிடும். கிளறுவது கஷ்டம்.




ரவை நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
எல்லாம் சேர்ந்து கொண்டு கெட்டியானதும், நெய்யை விட்டுக் கிளறவும்.





பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தபின் குங்குமப்பூ, ஏலப்பொடி,வறுத்த முந்திரி  சேர்த்து கிளறவும்.இதற்கு கேசரி பவுடர் சேர்க்க தேவையில்லை.



சுவையான  ஃப்ரூட் கேசரி ரெடி. பார்ட்டிகளுக்கு ஏற்ற இனிப்பு இது.
இதில் மாம்பழம், பலாப்பழம் இருந்தாலும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சேர்க்க சுவை அருமையாக இருக்கும்.
அதற்கேற்றவாறு சர்க்கரையை சற்று அதிகமாக சேர்க்கவும்.



திங்கள், 23 மே, 2016

கடலை மாவு லாடு

தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 250 கிராம்
நெய் - 150 கிராம்
கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்
ஈக்வல் (Artifical Sweetener Equal) - ¼ கப்
ஏலப்பொடி - ¼ டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் 
(
தேவையெனில் சேர்க்கவும்) - தேவையான அளவு

செய்முறை

கடலை மாவை சலித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து வைக்கவும். பின்பு, எல்லா நெய்யையும் விட்டு உருகியதும், கடலை மாவைப் போட்டு கைவிடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்கவும்.

கடலை மாவு நிறம் மாறி, வாசனை வந்ததும், அதில் உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து, ஈக்வலைச் சேர்க்கவும். அது கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுலபமான, சுவையான கடலை மாவு லாடு, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது!




திங்கள், 16 மே, 2016

எக்லேஸ் ஆப்பிள் கேக் (Eggless Apple Cake)






 ஆப்பிள் - 2 
மைதா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் முதல் ஒரு கப் வரை
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
லேசாகப் புளித்த மோர் - 3/4 கப்
காய்ந்த திராட்சை - 15



ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.



ஆப்பிளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய ஆப்பிள், திராட்சைகளை மைதா கலவையுடன் கலந்து, மோர் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும்.



கேக் செய்யும் பாத்திரத்தில் மைதாமாவு தடவி, அதில் இந்த கலவையை சீராகக் கொட்டவும்.


ஓவனை முன்னமே சூடு செய்து (ப்ரீ ஹீட்) வைத்து அதில் கேக் ட்ரையை வைத்து 180 டிகிரி சென்டிக்ரேடில் 30 முதல் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.



 வெளியே எடுத்து ஆறியதும் மேலே சர்க்கரைப் பொடியை தூவி விரும்பியபடி அலங்கரிக்கவும். ஐஸிங்கும் செய்யலாம். அவரவர் விருப்பம்.செய்வதற்கு சுலபமான இந்த கேக் சுவையிலும் அருமையாக இருக்கும்.


திங்கள், 9 மே, 2016

காஜூ சேலஞ்ச்

தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
பூரணம்:
பால் 1 லிட்டர் (கோவா காய்ச்சி அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்)
பாதாம் – 10
பொடித்த முந்திரி - ½ கப் (பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கவும்)
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்
பாகிற்கு:
1½ கப் சர்க்கரை
கேசரி கலர் – சிட்டிகை
ஏலப்பொடி, நெய், எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மைதா, நெய், உப்பை தேவையான அளவு நீர் சேர்த்து, பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கோவா, பாதாம்-முந்திரி பொடி, ஏலப்பொடி, நெய் – ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விழுதாக்கவும்.
பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒரு சப்பாத்தியின் மேல் கோவா விழுதை சமமாகத் தடவி, மேலே மற்றொரு சப்பாத்தி போட்டு இறுக்கி சுருட்டி கத்தியால் சிறு துண்டுகளாக்கவும்.
சர்க்கரையுடன் அதே அளவு நீர் சேர்த்து நன்கு கரைய விடவும். அதில் கேசரி கலரும், ஏலப்பொடியும் சேர்க்கவும்.
எண்ணெயை மிதமாகக் காய வைத்து, அதில் வெட்டிய சப்பாத்தி துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து, சூட்டுடன் சர்க்கரைப் பாகில் ஊற விடவும். நன்கு ஊறியதும், எடுத்து வைக்கவும்.
சுவையான இந்த ‘காஜூ சேலஞ்ச்’ உங்கள் நாவுக்கு ஒரு சேலஞ்சான இனிப்பு!

காரட் ஹல்வா

தேவை
காரட் - அரைக் கிலோ
சர்க்கரை - ஒரு கப்
பால் பவுடர் - 25 கிராம்
நெய் - அரை கப்
முந்திரிபருப்பு - 10
பாதாம் - 10
ஏலக்காய் - 5



காரட்டை துருவி ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி பாலும், தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.



ஆற விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.




வாணலியில் அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.



சர்க்கரை, பால் பவுடரை நன்கு கலந்து வைக்கவும். கிளறும் விழுது சற்று கெட்டியானதும் சர்க்கரைக் கலவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கேஸை சிம்மில் வைக்கவும்.


நன்கு சேர்ந்து கொண்டதும், நெய்யைச் சிறிது சிறிதாக விடவும்.ஹல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும். 



சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய சுவையான ஹல்வா இது.




    திங்கள், 2 மே, 2016

    ஸொஜ்ஜி அப்பம்

    தேவை
    பூரணத்திற்கு
    ரவை...1கப்
    சீனி....11/2 கப்
    நெய்....1/4 கப்
    ஏலப்பொடி...1/2 தேக்கரண்டி
    மேல்மாவிற்கு
    மைதா...1 கப்
    உப்பு...சிட்டிகை
    கேசரி பவுடர்...சிட்டிகை
    எண்ணை...2 தேக்கரண்டி
    எண்ணெய் ...வேகவிட
    செய்முறை
    மேல்மாவுக்கு எழுதியுள்ளவற்றை தேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.


    பாதியளவு நெய்யில் ரவையை சிவக்க வறுத்து அதில் 1 1/2  கப் நீர் சேர்த்து வேகவிடவும். 
    வெந்து கெட்டியானதும் அதில் சீனி சேர்த்து கிளறவும். 
    மீதி நெய்யை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலப்பொடி சேர்த்து சிறு உருண்டைகளாக்கவும்.






     வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணையைத் தடவி பிசைந்த மைதாவை கையால் சிறிய வட்டமாக்கி அதனுள் பூரணம் வைத்து நன்கு இழுத்து மூடி உள்ளங்கையால் சிறு அதிரசம் போல் தட்டி, எண்ணையை சுட வைத்து அதில் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.



    இனிப்பு பணியாரம்


    தேவை
    இட்லிஅரிசி -- 11/2  கப்
    ப.அரிசி -- 1/2 கப்
    ஜவ்வரிசி -- 1/4கப்
    உளுந்து -- 1/4கப் 
    வெந்தயம் -- 1 டீஸ்பூன்
    கருப்பட்டி --  11/2 கப்
    ஏலக்காய் -- 2
    சமையல் சோடா -- 1 சிட்டிகை
    தேங்காய்த்துருவல் -- 1/4 கப்
    எண்ணெய் -- பொறிக்க

    செய்முறை
    அரிசிகள் ,பருப்பு, வெந்தயம் இவற்றை ஒன்றாக நனைத்து ஊற வைக்கவும்.ஜவ்வரிசியைத் தனியாக ஊற வைத்து எல்லாம் சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.உப்பு சிறிது சேர்க்கவும்.
    கருப்பட்டியுடன் கால் கப் நீர் சேர்த்து சுட வைக்கவும். மாவுடன் சற்று சூடான கருப்பட்டி கரைசல், தேங்காய், ஏலப்பொடி சேர்த்து அந்தக் கலவையுடன் பொடி செய்த வெல்லம், ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
    நெய்யில் மிகப் பொடியாக நறுக்கிய திராட்சை, பேரீச்சை, பாதாம், முந்திரி வறுத்து சேர்க்கவும்.
    3/4 கப் எண்ணையுடன் 1/4 கப் நெய் சேர்த்து காய வைத்து, சிறு கரண்டியால் விட்டு பணியாரம் செய்தால் நல்ல ருசியாக இருக்கும்.
    கருப்பட்டி சேர்த்த இந்தப் பணியாரம் உடலுக்கு நல்லது. இதற்கு பதிலாக இதே அளவு வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

    பாதாம் – பிஸ்தா – ஃபிர்ணி (ஜம்மு-காஷ்மீர்)


    தேவை
    பாதாம் – 15
    பால் - 21/2 கப்
    அரிசி – 4 டேபிள் ஸ்பூன்
    சீனி - 1/4 கப்
    குங்குமப்பூ – 8 இதழ்கள்
    ஏலப்பொடி, பிஸ்தா துண்டுகள் – 4 டீஸ்பூன்.

    செய்முறை
    அரிசியைக் களைந்து நீரில் சற்று ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு 1/2 மணி ஊற விட்டு தோல்  நீக்கி பாலுடன் சேர்த்து மேலும் 2 சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். விழுது நல்ல நைஸாக இருக்க வேண்டும்.
    இரண்டு டீஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். மீதி பாலை அடுப்பில் வைத்து பால் 3/4 பாகம் ஆகும் வரைக் காய்ச்சவும். அதில் சர்க்கரை போட்டுக் கரைந்ததும், அதில் அரைத்த பாதாம், அரிசி விழுதைப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கிளறாவிட்டால், அடி பிடித்து விடும். பாதாம், அரிசி வெந்து கெட்டியான பதம் வந்ததும், இறக்கி குங்குமப்பூ, ஏலப்பொடி சேர்க்கவும். சிறிய கப்புகளில் ஊற்றி, மேலே சீவிய பிஸ்தா துண்டுகள் சேர்த்து குளிர வைத்து பரிமாறாவும். இது ரிச்சான காஷ்மீர்வாசிகளால் செய்யப்படும் ரிச்சான பாயசம்!

    ஞாயிறு, 1 மே, 2016

    மோகன் தால்





    தேவை 
    கடலை மாவு - 1/4 கிலோ
    நெய் - 1/4 கிலோ
    கோவா – 100 கிராம்
    பால் – 1/8 கப்
    சீனி – 150 கிராம்
    ஏலப்பொடி, குங்குமப்பூ – சிறிது
    துண்டாக்கிய பாதாம், மிந்திரி துண்டுகள்.
    செய்முறை:
    கடலை மாவை நன்கு சலித்து, நான்கில் ஒரு பங்கு நெய்யை உருக்கி விட்டு, பாலையும் கை பொறுக்கும் சூடாக விட்டுப் பிசறி, (அரிசி பிட்டுக்கு பிசறுவது போல்) நான்கு மணி நேரம் வைக்கவும். 




    கோவாவை நன்கு உதிர்த்து, 2 ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். குங்குமப்பூவை சிறிது வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும்.
    பிசறிய கடலை மாவை ஒரு சல்லடையில் நன்கு அழுத்தி, கட்டிகளின்றி சலிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் அளந்து கொண்டு, அதில் பாதி அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். (75 கிராம் சரியாக இருக்கும்). மீதியுள்ள நெய்யைக் காய வைத்து அதில் சலித்த மாவைப் போட்டு நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். அதிலேயே வறுத்து வைத்துள்ள கோவாவை சேர்த்து, மேலும் இரண்டு பிரட்டு பிரட்டி வேறு பாத்திரத்தில் கொட்டவும்.

    சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூழ்கும் வரை நீர் விட்டு கெட்டி கம்பி பாகு வைக்கவும். 


    அதில் வறுத்த மாவு, ஏலபொடி, குங்குமப்பூ சேர்த்து விடாமல் கிளறவும். பத்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே துண்டாக்கிய மிந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும். துண்டுகளாக்கி பரிமாறவும்.

    வெல்ல கொழுக்கட்டை

    தேவை

    மேல்  மாவுக்கு
    அரிசி மாவு --- 1 கப்
    நல்லெண்ணை --- 2 தேக்கரண்டி
    பால் -- 2 தேக்கரண்டி
    உப்பு -- 1 சிட்டிகை



    பூரணத்திற்கு

    தேங்காய்த்துருவல் --- 1 கப்
    பொடித்த  வெல்லம் --  1/4 கப்
    ஏலப்பொடி -- 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    அரிசிமாவை  நன்கு  சலித்துக்  கொள்ளவும்.  நல்ல  நைஸாக  இருக்க  வேண்டும்.  அத்துடன் சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து  கரைத்துக்  கொள்ளவும்.



    வாணலியில்  1/4  கப்  நீர்  சேர்த்து  நன்கு  கொதிக்க  வைக்கவும்.  அதில்  எண்ணை,  உப்பு,  பால் சேர்த்து  கொதித்ததும்,  அதில்  கரைத்த  அரிசிமாவை  விட்டுக்  கிளறவும்.




    மாவு கெட்டியாகி, கட்டி இல்லாமல் ஒட்டாமல் வரும்போது இறக்கி ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதில் இருக்கும் சூட்டுக்கு உள்ளே நன்கு வெந்து கொள்ளும். ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.


    தேங்காய்த்  துருவலையும்,  வெல்லத்தையும்  சேர்த்து  வாணலியில்  போட்டு  கிளறவும்.  இரண்டும்  சேர்ந்து  பூரண  பதம்  வந்ததும்  அதில்  ஏலப்பொடி  சேர்த்து  நன்கு  கலந்து  சிறு உருண்டைகளாக்கவும்.











    மாவையும்  சிறு  உருண்டையாக்கி,  உள்ளங்கையில்  வைத்து  சிறிய  கப்  போல  செய்து,  அதனுள் பூரணம்  வைத்து  அழகாக  மூடி  ஆவியில்  வேக  விட்டு  எடுக்கவும்.சுவையான  வெல்ல கொழுக்கட்டை  ரெடி!





     மேல்மாவு  அதிகமாகிவிட்டதா?  கவலையே  வேண்டாம்!  அடுத்த  ரெசிபி  'மண்ணாங்கட்டி'!

    குறிப்பு
    கொழுக்கட்டை  மாவு  கிளறுவது  ஒரு  சிரமமான  விஷயம்.  புதிதாக  சமைப்பவர்களுக்கு  சரியாக  வராது.  வென்னீரைக்  கொதிக்க  வைத்து  அதில்  மாவை  அப்படியே  போடும் போது  கட்டி  தட்டி  விடும்.  சரியாக  கப்  செய்ய  வராது.  நான்  எழுதியுள்ள  முறை  மிக  சுலபமானது

    சனி, 30 ஏப்ரல், 2016

    கடலை உருண்டை


                                 
                                                                
    தேவை
    நிலக்கடலை--- 2 கப்
    வெல்லம்--- 1 கப்

    செய்முறை

    கடலையை  வறுத்து  ஒரு  முறத்தில்  போட்டுத்  தேய்த்து  தோலி  நீக்கி  இரண்டாக  உடைத்துக்  கொள்ளவும். அல்லது  கடையில்  தயாராகக்  கிடைக்கும்  உப்பு  சேர்க்காத  கடலையை  வாங்கி  சுத்தம்  செய்து  லேசாக  சூடு  வர  வறுக்கவும்.
     


    வெல்லத்துடன்  1/4  கப்  நீர்  சேர்த்து  பாகு  வைக்கவும்.  வெல்லம்  கரைந்ததும்  வடிகட்டி  மண்  நீக்கவும்.  மீண்டும்  அடுப்பில்  வைத்து  கெட்டி  கம்பிப்  பாகு  ஆக்கவும்.


    பாகை  தண்ணீரில்  போட்டால்  கரையாமல்  உருட்டும்  பதம்.

    பாகை  இறக்கி  கடலையில்  விட்டு  ஒரு  கரண்டிக்  காம்பால்  கிளறவும்.
     


    சற்று  ஆறியதும்,  கையில்  சிறிது  அரிசி  மாவைத்  தொட்டுக்கொண்டு  சிறிய  உருண்டைகளாகப்  பிடிக்கவும்.  


    ஆறியதும்  எடுத்து  வைக்கவும். சத்தான  இந்த  கடலை  உருண்டையை  குழந்தைகள்  விரும்பிச்  சாப்பிடுவார்கள்!

    திங்கள், 25 ஏப்ரல், 2016

    பைனாப்பிள் கேசரி


    தேவை
    ரவை - 1 கப்
    சர்க்கரை - 2 கப்
    பைனாப்பிள் துண்டுகள் சில
    முந்திரி - 10
    ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
    திராட்சை - 10
    நெய் - 100 கிராம்
    கேசரி பவுடர் - சிறிதளவு
    செய்முறை
    பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 மடங்கு தண்ணீர்) கொதிக்க விடவும்.

    வாணலியில் 3 தேக்கரண்டி நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்து எடுத்து அதிலேயே பைனாப்பிளை சிறு துண்டுகளாக்கி நன்கு வதக்கி எடுக்கவும்.
    மேலும் 2 தேக்கரண்டி நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.
    அதில் கொதிக்க வைத்த நீரை விட்டு கெட்டியாகக் கிளறவும். அத்துடன் வதக்கிய பைனாப்பிள் துண்டுகளும் சேர்க்கவும். ரவை வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
    சேர்ந்து கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
    கேசரி பவுடர்,ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
    கேசரியை கிண்ணத்தில் போட்டோ, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி துண்டங்களாக்கியோ சாப்பிடலாம்.


    சில குறிப்புகள்
    வெந்நீரை விட்டு கேசரி செய்தால் கட்டி தட்டாமல் வரும்.

    ரவை வெந்ததை தெரிந்து கொள்ள, ரவையைத் தொட்டால் பிசுக்கென்று இல்லாமல், கையில்  ஒட்டாமல் வந்தால் அது வெந்ததன் அடையாளம்

    ரவை வெந்ததா என்று தொட்டு தெரிந்துகொண்ட பின் சர்க்கரை சேர்ப்பது நலம்.

    தேவையான நெய்யை முதலிலேயே சேர்த்துவிட்டால் சரியான பதத்தில் வந்துவிடும். இல்லாவிட்டால் நெய்யை விட விட அது உறிஞ்சிக்கொண்டே போகும், கடைசியில் கக்கும் - இதைத் தவிர்க்கலாம்.

     தண்ணீரில் ரவையை வேகவிடாமல் கொதிக்கும் நீருடன் அரை கப்  பாலும் சேர்த்தால் பால்கோவா வாசனையுடன் இருக்கும்.

     தேங்காய் பால் வாசனையுடன் கேசரி வேண்டுமானால் கடைசியில் ரெண்டு ஸ்பூன் கெட்டி தேங்காய் பால் சேர்க்கலாம்.

    பைனாப்பிள் சேர்க்க விருப்பமில்லையெனில், ரோஸ் எசன்ஸ் சேர்த்தால் வித்யாசமான மணம்,  சுவையில் இருக்கும்.



    ரவா - கேரட் லட்டு


    தேவையான பொருள்கள்:
    பாம்பே ரவை --1 கப்
    தேங்காய் துருவல் -- 1 கப்
    கேரட் துருவல் -- 1 கப்
    சர்க்கரை --- 2 கப்
    ஏலப்பொடி --1/2 டீஸ்பூன்
    நெய் --- 6 டேபிள் ஸ்பூன் 
    முந்திரி பருப்பு  -- 15
    திராட்சை --10
    செய்முறை:
    முதலில் வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை போட்டு நிறம் மாறாமல் வறுத்தெடுத்து, சற்று கரகரப்பாக அரைக்கவும். சர்க்கரையை பொடிக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும்.
    வாணலியில் மீதியுள்ள நெய்  விட்டு அதில்  தேங்காய் துருவல், கேரட் துருவல், ஏலக்காய் தூள் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் முன்பே வறுத்து அரைத்து வைத்துள்ள ரவையையும், சர்க்கரைப் பொடி  சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைத்து விடவும். இக்கலவையை மிக்சியில் விப்பரில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
    வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.கலவை சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
    நல்ல கலருடன் கூடிய, சுவை மிகுந்த குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரவா - கேரட் லட்டு சுவைக்க தயார். 
    குறிப்பு :
    கேரட்டிலும் இனிப்பு தன்மை இருப்பதால் சர்க்கரையை அவரவர் ருசிக்கேற்ப பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

    வியாழன், 21 ஏப்ரல், 2016

    ஃப்ரூட் பாசந்தி


    தேவையான பொருட்கள்:
    பால் - ஒரு லிட்டர்
    சர்க்கரை - 200 கிராம்
    பாதாம் மிக்ஸ் - 4 தேக்கரண்டி
    (மிக்ஸுக்கு பதிலாக 6 பாதாம்களை வெந்நீரில் ஊற வைத்து தோலி நீக்கி பாலில் அரைத்து சேர்க்கவும்.)
    ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1
    செர்ரிப் பழம் - 4
    மாதுளை முத்துக்கள - சிறிது
    உலர்ந்த திராட்சை -10,
    வறுத்த முந்திரிப்பருப்பு - 10
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
    குங்குமப்பூ...சில இதழ்கள்
    செய்முறை :
    ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும்.
    பாலை பாதியளவுக்கு காய்ச்சி சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, பாதாம் மிக்ஸ் சேர்த்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கவும்.
    குங்குமப்பூ சேர்க்கவும்.
    ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம்,மாதுளை முத்துக்கள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.
    பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.
    குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.