திங்கள், 25 ஏப்ரல், 2016

ரவா - கேரட் லட்டு


தேவையான பொருள்கள்:
பாம்பே ரவை --1 கப்
தேங்காய் துருவல் -- 1 கப்
கேரட் துருவல் -- 1 கப்
சர்க்கரை --- 2 கப்
ஏலப்பொடி --1/2 டீஸ்பூன்
நெய் --- 6 டேபிள் ஸ்பூன் 
முந்திரி பருப்பு  -- 15
திராட்சை --10
செய்முறை:
முதலில் வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை போட்டு நிறம் மாறாமல் வறுத்தெடுத்து, சற்று கரகரப்பாக அரைக்கவும். சர்க்கரையை பொடிக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும்.
வாணலியில் மீதியுள்ள நெய்  விட்டு அதில்  தேங்காய் துருவல், கேரட் துருவல், ஏலக்காய் தூள் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் முன்பே வறுத்து அரைத்து வைத்துள்ள ரவையையும், சர்க்கரைப் பொடி  சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைத்து விடவும். இக்கலவையை மிக்சியில் விப்பரில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.கலவை சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
நல்ல கலருடன் கூடிய, சுவை மிகுந்த குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரவா - கேரட் லட்டு சுவைக்க தயார். 
குறிப்பு :
கேரட்டிலும் இனிப்பு தன்மை இருப்பதால் சர்க்கரையை அவரவர் ருசிக்கேற்ப பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக