சனி, 30 ஏப்ரல், 2016

பனீர் கோஃப்தா


தேவை கோஃப்தாவிற்கு...
குலாப்ஜாமூன் மிக்ஸ் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்க
பனீர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
பிரெட் துண்டுகள் - 2 (ஓரங்களை நீக்கிவிட்டு உதிர்க்கவும்.)
எண்ணெய் - பொரிப்பதற்கு.
க்ரேவிக்கு..
சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தனியாபொடி - 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி  - 11/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தக்காளி - 2, காரட் துருவல் - 1/4 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
உருளைக்கிழங்கை வேக விடவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு,வெங்காயம்  வதக்கவும்.
அத்துடன்  குலாப்ஜாமூன் மிக்ஸ், வெந்த உருளை, உப்பு, மிளகாய்ப்பொடி, துருவிய பனீர், நறுக்கிய பச்சை மிளகாய், பிரெட் துகள் எல்லாம் சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கவும். கோஃப்தா தயார்.
தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலி  நீக்கி, அரைத்து கூழாக்கவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு விழுது,தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கி, அதிலேயே வெங்காயம்,காரட் துருவல் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு வதக்கி அதில் தனியாபொடி, மிளகாய்ப்பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து 11/2 கப் நீர் விட்டுக் கொதிக்க விடவும்.
எல்லாமாகச் சேர்ந்து கொதித்து கெட்டியானதும்  இறக்கி மல்லித்தழை தூவி பொரித்த கோஃப்தாக்களை இதில் சேர்க்கவும்.
பனீர் கோ ஃப்தா சப்பாத்தி, ரொட்டியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக