சேமியா பாயசம் சர்க்கரை சேர்த்து செய்வது வழக்கம். இது வெல்லம் சேர்த்து செய்வதால் பிரதமன்.
தேவை சேமியா - 25 கிராம் நெய் - 6 மேசைக்கரண்டி சுக்குபொடி - 1 டீஸ்பூன் ஏலப்பொடி - 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 15 வெல்லம் - 100 கிராம் தேங்காய்ப்பல் - 2 டேபிள்ஸ்பூன் (நீளமான பல்லாக நறுக்கவும்) தேங்காய் - ஒன்று முதல் தேங்காய்ப்பால் - 1 கப் இரண்டாம் தே.பால் - 1 1/2 கப் செய்முறை ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைச் சேர்த்து, அதில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும், தண்ணீரை வடிகட்டி எடுக்கவும். அடுப்பில் வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு சூடானதும் முந்திரிப்பருப்பு, தேங்காயைப் பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, சேமியாவை பொன்னிறமாக வறுத்து, இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றி, சேமியாவை வேக விடவும்.
இத்துடன் முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி தீயை முற்றிலும் குறைத்து சுக்குப்பொடி , ஏலப்பொடி வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்ப்பல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இறுதியாக மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். வித்யாசமான சுவையில் சூப்பர் சேமியா பிரதமன் தயார்!
|
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
வியாழன், 21 ஏப்ரல், 2016
சேமியா பிரதமன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக