தேவையான பொருட்கள்:
ரவா - 2 கப் கடலைமாவு - 3/4 கப் பெரிய வெங்காயம் - 4 மிளகாய் வற்றல் - 6 பச்சைமிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 3 கொத்து கொத்தமல்லி - 2 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய், நெய்
செய்முறை:
ரவாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், சீரகம், உப்பு இவற்றை் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
ஊற வைத்த ரவாவுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி சற்று கனமான அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு, சிறிது நெய் விட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
இதில் கேரட், கோஸ் துருவியும், கீரை பொடியாக நறுக்கி சேர்த்தும் வார்க்கலாம்.
சாம்பார், சட்னியுடன் சாப்பிடவும்.
|
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
வெள்ளி, 22 ஏப்ரல், 2016
ரவா கார அடை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவரை செய்ததில்லை.
பதிலளிநீக்கு