Thursday 21 April 2016

அழகர் கோயில் தோசை

இது அழகர் கோயில் ஆலயத்தில் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் தோசை.

தேவை
ப.அரிசி...1 கப்
பு.அரிசி....1/2 கப்
கருப்பு உளுந்து....1 கப்
மிளகு பொடி....2 டீஸ்பூன்
சுக்குப்பொடி.....1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்....2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு...தேவையான அளவு
நெய்...தோசை வார்க்க

செய்முறை
அரிசி, பருப்புகளை 2 மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும்.

இதற்கு கண்டிப்பாக கருப்பு உளுத்தம் பருப்புதான் தேவை.

அரிசிகளை சற்று கரகரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

உளுந்தை அதிகம் களையாமல் ஓரளவு தோலியுடன் நைஸாக அரைத்து அரிசிமாவுடன் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.




ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கழித்து மிளகு பொடி, சுக்குப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து  தோசை வார்க்கவும்.




இதற்கு நெய் விட்டு வார்த்தால்தான் நன்றாக இருக்கும்.




சாம்பார், மிளகாய் பொடியுடன் சாப்பிட அருமையாகஇருக்கும்.




No comments:

Post a Comment