தேவை
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பைனாப்பிள் துண்டுகள் சில
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 100 கிராம்
கேசரி பவுடர் - சிறிதளவு
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பைனாப்பிள் துண்டுகள் சில
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 100 கிராம்
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 மடங்கு தண்ணீர்) கொதிக்க விடவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்து எடுத்து அதிலேயே பைனாப்பிளை சிறு துண்டுகளாக்கி நன்கு வதக்கி எடுக்கவும்.
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 மடங்கு தண்ணீர்) கொதிக்க விடவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்து எடுத்து அதிலேயே பைனாப்பிளை சிறு துண்டுகளாக்கி நன்கு வதக்கி எடுக்கவும்.
மேலும் 2 தேக்கரண்டி நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.
அதில் கொதிக்க வைத்த நீரை விட்டு கெட்டியாகக் கிளறவும்.
அத்துடன் வதக்கிய பைனாப்பிள் துண்டுகளும் சேர்க்கவும். ரவை வெந்தவுடன்
சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
சேர்ந்து கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
கேசரி பவுடர்,ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
வெந்நீரை விட்டு கேசரி செய்தால் கட்டி தட்டாமல் வரும். ரவை வெந்ததை தெரிந்து கொள்ள, ரவையைத் தொட்டால் பிசுக்கென்று இல்லாமல், கையில் ஒட்டாமல் வந்தால் அது வெந்ததன் அடையாளம் ரவை வெந்ததா என்று தொட்டு தெரிந்துகொண்ட பின் சர்க்கரை சேர்ப்பது நலம். தேவையான நெய்யை முதலிலேயே சேர்த்துவிட்டால் சரியான பதத்தில் வந்துவிடும். இல்லாவிட்டால் நெய்யை விட விட அது உறிஞ்சிக்கொண்டே போகும், கடைசியில் கக்கும் - இதைத் தவிர்க்கலாம். தண்ணீரில் ரவையை வேகவிடாமல் கொதிக்கும் நீருடன் அரை கப் பாலும் சேர்த்தால் பால்கோவா வாசனையுடன் இருக்கும். தேங்காய் பால் வாசனையுடன் கேசரி வேண்டுமானால் கடைசியில் ரெண்டு ஸ்பூன் கெட்டி தேங்காய் பால் சேர்க்கலாம். பைனாப்பிள் சேர்க்க விருப்பமில்லையெனில், ரோஸ் எசன்ஸ் சேர்த்தால் வித்யாசமான மணம், சுவையில் இருக்கும். | |||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக